கோவையில் வைக்கப்பட்ட சர்ச்சையான பேனர்.! "கொரோனா இல்லாத எங்களுக்கு கொரோனா இருக்கு, என அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு வாழ்த்துகள்"

கோவை மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், வாழ்த்து செய்தியோடு வீட்டின் முன்புறம் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு.

கோவை: கோவை மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், வாழ்த்து செய்தியோடு வீட்டின் முன்புறம் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த நபரின் தந்தை கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரது தங்கை உட்பட குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி, மகள், தங்கை மற்றும் தங்கையின் மகள் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இவரது வீட்டின் முன்புறம் மாநகராட்சி சார்பில் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டது.



இதனிடையே, நேற்று அந்த நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக, அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் தனது வீட்டின் முன் ஒரு பேனர் வைத்துள்ளார். அதில் "கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள், கோவிட்-19 இல்லாத 4 பேருக்கு இருக்கு என்ற முத்திரை குத்தி, என்னையும் என் குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்" என்று அச்சிடப்பட்டிருந்தது.



இதுகுறித்து அந்த நபர் கூறுகையில்,

"எனது தந்தை இறந்ததைத் தொடர்ந்து, எங்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசோதனை செய்யப்பட்டதில், எங்கள் வீட்டில் உள்ள 4 பேருக்கும் கொரோனா இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நாங்கள் இஎஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்ததால், வீட்டிற்கே வந்துவிட்டோம். எங்களது உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் நேற்று தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டோம். இதில் எங்க குடும்ப உறுப்பினர் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது."

"இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மாநகராட்சி கொடுத்த தவறான தகவலால், நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சல் அடைந்தோம் அதன் காரணமாக இதுபோன்ற பேனர் வைத்தேன்," என்றார்.



இது குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமல்

இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு 4-5 நாட்களில் மறு பரிசோதனை செய்யும் போது, கொரோனா இல்லை என்று முடிவு வருவது இயல்பானது. இருப்பினும், சம்பந்தபட்ட நபர்கள் தனிமைப்படுத்தி கொள்வது மிக அவசியம், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...