கோவை வனப்பகுதியில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்காமல், பட்டாசுகளை வெடித்து துரத்தும், வனத்துறை -  வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கோவை வனப்பகுதியில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்காமல், பட்டாசுகளை வெடித்து துரத்தும், வனத்துறை - வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

கோவை மாங்கரை பகுதியில் உள்ள அதிரடி முகாமிற்குள், வாயில் பலத்த காயங்களுடன் புகுந்த, மக்னா யானைக்கு, போதிய சிகிச்சை அளிக்காமல், அதை துரத்துவதில் ஆர்வம் காட்டி வரும் வனத்துறையின் போக்கு, கண்டனத்துக்குரியது, என கோவை வன ஆர்வலர்கள், குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை ஆனைகட்டி செல்லும் சாலையில் உள்ள மாங்கரை அருகே அதிரடிப்படை முகாம் உள்ளது. கேரள தமிழக எல்லை என்பதால் நக்சல் ஊடுருவதால் அதை தடுப்பதற்காக, இம்முகாம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதே பகுதியில் ஒரு வார காலமாக வாயில் பெரும் காயங்களுடன், மக்னா யானை ஒன்று தமிழக - கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம புறங்களில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, அன்று மருதமலை பகுதியில், அதே யானையானது, நாக்குபகுதி சிதறி, மேல் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்துள்ளது. 



அப்போது, பல முறை முயற்சி செய்தும், அந்த யானையை பிடிக்க முடியவில்லை, எனவும் அந்த யானை ஆகஸ்ட் 17 அன்று ஆனைகட்டி வழியாக கேரளாவுக்கு சென்றுவிட்டது, என வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. 

பிறகு, மன்னார்காடு பகுதியில், சுற்றித்திரிந்த அந்த யானைக்கு, கேரள வனத்துறையின் சார்பாகசிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது, அந்த காயங்களின் தன்மையையும், தாக்கத்தையும் ஆராய்ந்த, வன மருத்துவர்கள், அந்த யானை நீண்ட காலம் உயிர்வாழாது, எனவும் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, என்ற முன்கணிப்புடன் யானையை, மீண்டும் காட்டுக்குள் விட்டனர்.



அதன் பின்பு, கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அந்த யானை கேராளவிலிருந்து மீண்டும் தமிழக பகுதியான, போளுவம்பட்டி வரம்பில் உள்ள தேவராயபுரம் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, அந்த யானையை கண்காணிப்பு கேமிரா மற்றும் தனிப்படை அமைத்து, வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

இது குறித்து, வனத்துறை சார்பில் வெளியான அறிக்கையில், ஆரம்ப நாட்களில், அந்த யானைக்கு உண்பதற்கு வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் சத்துமாவு ஆகியவற்றை உண்டு வந்தது. இதற்கிடையில்,

மருதமலை, நஞ்சுண்டாபுரம், வரபாளையம் மற்றும் ஜம்புகண்டி பிரிவு பகுதிகளில் 7 வீடுகளையும், தோட்டங்களையும் சேதப்படுத்தியது.

சில நேரங்களில், அதற்கு வைக்கப்படும் உணவை கவனிக்காமல், உணவைத் தேடி அடிக்கடி வழிதவறியதால், யானையினை வனப்பகுதிக்குள் வைத்திருக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சரிவர பயன் அளிக்கவில்லை. 

பின், கேரளாவை நோக்கி அதன் வழக்கமான நகர்வு பாதையில் சென்று வந்த யானை, நாளடைவில் மிக நோயுற்ற நிலைக்கு மாறிவிட்டது. நாக்கு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால், எந்தவொரு சிகிச்சையும் சாத்தியமில்லை, என வன மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து, நேற்று மாலை, கோவை மாங்கரை பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் தங்கியுள்ள முகாமிற்கு, அந்த மக்னா யானை வந்துள்ளது. இதை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், பட்டாசு வெடித்தும், வண்டி சைலன்சர்கள் மூலம் ஒலி எழுப்பியும், அந்த யானையை துரத்த முற்பட்டுள்ளனர். 



எதற்கும் அசராத அந்த யானை, அங்கிருந்த சமையல் கூடத்தில்புகுந்தது. பின்னர், அங்கு வந்தவனத்துறையினர் யானையை காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தற்போது, அந்த நோய்வாய்ப்பட்ட மக்னா யானை துவைபதி பழங்குடி கிராமப் பகுதியில் உள்ளதாகவும், அதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர், தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கோவையை சேர்ந்த வன ஆர்வலர்கள், அந்த யானையின், நாக்கு பகுதி முழுவதும் அவுட்டுக்காய் வெடித்ததில் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், 

வலியில் துடித்து வரும் அந்த யானைக்கு, வைத்தியம் செய்வதை விட்டுவிட்டு பட்டாசுகளை கொண்டு, அதை அட்டப்பாடி வனப்பகுதிக்கு, விரட்ட முயற்சி செய்கின்றனர். 

வாய் முழுக்க சிதைந்த நிலையில், உணவு உட்கொள்ளமுடியாத சூழலில் உள்ள அந்த யானையை, மேலும் அச்சம்மூட்டும் விதத்தில், பட்டாசுகள், ஜேசிபி கொண்டு துரத்துவது, கண்டனத்துக்குரியது, என்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...