சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை, திருமூர்த்திமலை அணை பூங்கா, ஆகிய சுற்றுலா பகுதிகள் மேம்படுத்தப்பட திட்டம்.

சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை, திருமூர்த்திமலை அணை பூங்கா, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ,திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி ஆகிய சுற்றுலா பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.



தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புதிய சுற்றுலா தலங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான 295 சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை முடிவெடுத்து திட்டம் தீட்டி உள்ளது.

இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்கள், சூழல் சுற்றுலா தலங்கள் , மக்களால் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியங்கள் ,தொல்பொருள் நினைவு சுற்றுலா தலங்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.



அதன்படி, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் களஆய்வு செய்து வருகின்றனர். இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை, திருமூர்த்திமலை அணை பூங்கா, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் ,திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி ஆகிய சுற்றுலா பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.



திருமூர்த்திமலை அணை பூங்கா திட்டம் 

திருமூர்த்திமலை அணைப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது. திருமூர்த்திமலை அணைப் பகுதியை ஒட்டிய 2700 மீட்டர் நீளம் கொண்ட பொதுப்பணித்துறை நிலத்தில் ஒரு அழகிய அணை பூங்கா கட்டுவதற்கான திட்ட கருத்துரு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை, மீண்டும் செயல்படுத்துவதற்க்கான ஆலோசனை திருமூர்த்திமலை அணையின் கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி ,கோட்ட உதவி செயற்பொறியாளர் காஞ்சிதுறை மற்றும் செயற்பொறியாளர் கோபி மற்றும் உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோருடன் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடத்தினர்.

கள ஆய்வில் முதற்கட்டமாக அணைப் பகுதியில் அணை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.



திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில், மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது .மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஆய்வு செய்த சுற்றுலா துறையினருக்கு, கோவில் செயல் அலுவலர் சுகுமார் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு முதல் தற்போது பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து விளக்கினார். 



திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலாப் பயணிகளுக்கு பஞ்சலிங்க அருவியில் செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் மற்றும் பஞ்சலிங்க அருவியில் உள்ள குறைபாடுகள் பற்றி கள ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் த.செல்வராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் ஜவஹர், மானுப்பட்டி அரவிந்தன் மற்றும் சாயப்பட்டறை கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.



Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...