பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.72 கோடி மோசடி; கேரளாவைச் சேர்ந்த இருவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்.

பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த, கேரளாவைச் சேர்ந்த இருவர் தலைமறைவு. குற்றவாளிகளை பிடிக்க ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த, கேரளாவைச் சேர்ந்த இருவர் தலைமறைவு. குற்றவாளிகளை பிடிக்க ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து (67). இவர், அதே பகுதியில் சொந்தமாக ரிசார்ட் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு அவரது ரிசார்டை ரூ.1 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

விற்பனை செய்து பெற்ற பணத்தை, பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று வங்கியில் இருந்த பணத்தை, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையிலுள்ள வங்கி கணக்கில் மாற்றி வைப்பதற்காக, அவர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அவரது நண்பர் அனுப்குமார் மற்றும் சதீஷ் இருவரையும் அழைத்து உள்ளார். 

தனது வங்கியில் இருந்த ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும், ரிசார்ட்டை விற்பனை செய்து லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 35 லட்சம் பணத்தையும், எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். 

இரவு நேரம் ஆகிவிட்டதால், முத்து பணத்தை வீட்டில் வைப்பதற்கு பதிலாக அவரது நண்பர் அனுப்குமாரிடம் கொடுத்து, மறுநாள் காலை 9 மணிக்கு கொண்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. 

இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அனுப்குமார் பணத்தைக் கொண்டு வராததால், அவரின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு வீடு பூட்டி கிடந்த நிலையில் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, தன்னிடமிருந்து ரூ.1 கோடியே 72 லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை அனுப்குமார் மோசடி செய்து எடுத்துச் சென்று தலைமறைவாகி விட்டதாக, 4ம் தேதியன்று ஆனைமலை போலீசில், முத்து புகார் தெரிவித்தார். 

இதை விசாரித்த, ஆனைமலை போலீசார், வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அனுப்குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும், வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...