கோவையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த விவகாரம்: முதியவரின் மனைவி மற்றும் வாடகைக்கு குடியிருந்த நபர் கைது!

கோவை: கோவையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் முதியவரின் மனைவி மற்றும் முதியவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் முதியவரின் மனைவி மற்றும் முதியவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் கடந்த 1ம் தேதி அதிகாலை 6 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளார். அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மறைந்து இருந்த நபர் ஒருவர் காளியப்பனை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காளியப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இதனிடையே, போலீசார் விசாரணையில் காளியப்பனை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த நபர் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஹரி கிருஷ்ணன் (41) என்பதும் இதற்கு உடந்தையாக காளியப்பனின் மனைவி ராஜாமணி (58) இருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ஹரி கிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் காளியப்பன் ஹரிகிருஷ்ணனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும் இதுகுறித்து காளியப்பனிடம் ஹரிகிருஷ்ணன் பலமுறை எச்சரித்தும் காளியப்பன் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும், இது குறித்து ஹரிகிருஷ்ணன் காளியப்பனின் மனைவி ராஜாமணியிடம் புகார் தெரிவித்தபோது, ராஜாமணி தனது கணவர் இதேபோல பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் தனது கணவர் காளியப்பனை கொலை செய்து விடுமாறும் அதற்கு உரிய சன்மானம் தருவதாகவும் கூறியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் ஹரி கிருஷ்ணனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று அவர் காளியப்பன் மனைவி ராஜாமணியின் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டதும் தெரியவந்தது.

பின்னர், ஹரிகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைச் சம்பவத்திற்கு காளியப்பன் மனைவி ராஜாமணி உடந்தையாக இருந்தது தெரியவந்ததையடுத்து, ராஜாமணியையும் போலீசார் கைது செய்து இருவரிடமும் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...