தேசிய கல்வி கொள்கை குறித்து கோவை மக்களுடன் பாஜக தமிழக துணைத் தலைவர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கலந்துரையாடல்

கோவை: தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான பேராசிரியர் கனகசபாபதி அவர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை அவர்களுடன் இணைந்து தேசிய கல்வி கொள்கை 2020 பற்றி கோவை மக்களுடன் கலந்துரையாடினர்.



கோவை: தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் மாநில துணை தலைவருமான பேராசிரியர் கனகசபாபதி அவர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை அவர்களுடன் இணைந்து தேசிய கல்வி கொள்கை 2020 பற்றி கோவை மக்களுடன் கலந்துரையாடினர்.



இந்த நிகழ்வின் போது, 34 ஆண்டு கால, நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கான தேவை மற்றும் காரணிகளை விரிவாக எடுத்துரைத்த பேராசிரியர் வரைவு ஆவணம் உருவாக்கப்பட்ட விதம் பற்றி விளக்கி கூறினார்.

மேலும், ஏட்டு கல்விக்கும் நடைமுறை வாழ்வியல் பயன்பாட்டுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்திருப்பதாக அவர் உறுதிபட தெரிவித்தார். கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்ட பேராசிரியர், கற்றல் இடைநிற்றலை நடவடிக்கையான கல்வி புள்ளிகள் சேமிப்பு திட்டம், மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் வகையில் பல்துறை கல்வி வளாகங்களை உருவாக்குதல், தொழிற்பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சிறப்பான, முழுமையான மதிப்பீட்டு முறைகள் மற்றும் முன்னேறிய நாடுகளுக்கு இணையான மொழிக்கொள்கை ஆகியவற்றை குறிப்பிட்டு விளக்கினார்.

இதைத்தொடர்ந்து, புதிய கல்வி கொள்கையை வரவேற்று பாராட்டிய அண்ணாமலை அவர்கள், ஒட்டுமொத்த ஆவணத்திலும் ஹிந்தி என்ற வார்த்தை ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, இது குறித்த எதிர்வினைகள் தேவையற்றவை என குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கையால் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சாத்திய கூறுகளை உணர்ந்து கொள்ள ஒரு முதிர்ச்சியான அணுகுமுறை தேவை என்று கூறினார். நிகழ்கால உலகின் அறிவு சார் பொருளாதார சூழலில் இந்தியா சம வாய்ப்பு பெற்று போட்டியிட புதிய கல்வி கொள்கை எவ்வாறு பயன்படும் என்பதை அவர் விளக்கமாக கூறினார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புதிய இந்தியாவுக்கான தொலை நோக்கு பார்வையின் அம்சங்களை விளக்கிய பேராசிரியர் அவர்களும், அண்ணாமலை அவர்களும் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான வலிமையான இளைய தலைமுறையை உருவாக்குவதில் புதிய கல்வி கொள்கை முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...