அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும்; வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும் - வானதி சீனிவாசன்

கோவை: கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை, தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.


கோவை: கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை, தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.



அப்போது அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் யாத்திரைக்கு ஆதரவு கோரினார்.



இதன் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், பா.ஜ.கட்சியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்திருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க கட்சி அமைப்பு விதிமுறைகளை மீறி கூடுதலாக துணைதலைவர் பதவி அண்ணாமலைக்கு கொடுக்கப்படவில்லை எனவும் சில நேரங்களில் பா.ஜ.க அமைப்பு விடயங்களில் விதி விலக்குகள் உண்டு, என தெரிவித்தார்.

மேலும், அமைப்பு விதிகளை மாற்றம் செய்து கொள்வது குறித்து தலைவர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் இதில் ஒன்றும் தவறில்லை எனவும் இதற்கு முன்பு பா.ஜ.க கட்சி உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக பதவி ஏற்ற வரலாறு உண்டு எனவும் சுரேஷ்பிரபு, ஜெய்சங்கர் போன்றவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது, என தெரிவித்தார்.

அண்ணாமலையின் வரவு பா.ஜ.கவிற்கு கூடுதல் பலம் என கூறிய அவர், திறந்த மனதோடும், மனமகிழ்வோடும், அவரை பா.ஜ.க குடும்பத்திற்கு வரவேற்று இருக்கின்றோம், என்றவர் அவருக்கு விரைவில் பணிகள் ஒதுக்கப்படும், என தெரிவித்தார்.

பா.ஜ.க கட்சியில், பல வருடமாக கட்சிக்கு உழைத்துக்கொண்டு இருந்தாலும், திறமைகளுடன் புதிதாக வருபவர்களுக்கும் கட்சி அங்கீகாரம் கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் சென்றுள்ளதாகவும், அப்போது தெரிவித்தார்.

எல்லா துணை தலைவர்களுக்கும், தனி தனியாக பணிகள் இருக்கும் எனவும் புதியதாக யாராவது வந்தால் அதிகாரம் போய் விட்டது என யாரும் நினைக்க வேண்டியதில்லை, என கூறிய அவர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள், எப்போதும் போல் நடைபெற்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

கட்சியில் சில மாற்றங்கள் வரலாம் எனவும் துணைதலைவர்களுக்கு வேறு பதவிகள் கொடுக்கப்படலாம், எனவும் தெரிவித்த அவர் அமைப்பு விதிமுறை மீறப்பட்டு இருப்பது குறித்து கட்சிகாரர்கள் தான் கவலைப்பட வேண்டும், ஆனால் இங்கு கட்சிகாரர்கள் யாரும் இது குறித்து பேசவில்லை, வெளியில் இருப்பவர்கள் தான் கவலை படுகின்றனர் என தெரிவித்தார்.

அரசியல் களத்தில் இருப்பவர்கள் தான் மக்களை சென்றடைந்து அவர்களுக்கு உதவ முடியும் எனவும் அதிகாரத்திற்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கினால் அதை தாங்கள் வரவேற்கின்றோம் எனவும், விரைவில் அவர் வரட்டும் என்றார்.

அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும் எனவும் வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும், எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...