கோவையில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன் வழங்க வேண்டும் - நா.கார்த்திக் எம்எல்ஏ கோரிக்கை!

கோவை: கோவையில் தொழில் முனைவோர்களுக்கு வங்கி பரிவர்த்தனைக்கு தகுந்தாற் போல், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன்கள் வழங்க வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: கோவையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம், அவர்களின் வங்கி பரிவர்த்தனைக்கு தகுந்தாற் போல், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன்கள் வழங்கப்பட வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ விடுத்துள்ள வேண்டுகோள் மனுவில் தெரிவித்திருப்பதாவது :-

 

தொழில் நகரமான கோவையில், பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளது. ஏற்கனவே நலிவடைந்து, சிரமப்படுகிற, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் , ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை முழுமையாக செயல்படவில்லை.  

இதனால், எந்தவித உற்பத்தி மற்றும் வருமானம் இன்றி, தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தொழில் முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில், ஏற்கனவே கிரெடிட் (CC) அல்லது ஓவர் டிராப்ட் (OD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடன் அளவில் இருந்து 20 சதவிகிதம் அதிகரித்து தற்போது வங்கிகளால் கடன் வழங்கப்படுகிறது.

ஆனால், வங்கிகளில் நடப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கும், இதுவரை எந்த விதமான வங்கிக்கடனும் வாங்காத தொழில் முனைவோர்களுக்கு இதுவரை எந்தவிதமான கடனும் வழங்கப்படவில்லை. 

 

எனவே, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்கள், தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற வேண்டிய நிலையில் இருப்பதால், வட்டி அதிகமாக இருந்தாலும் கூட கடன் பெற தனியார் நிதி நிறுவனங்களையே நாடவேண்டியுள்ளது.

இதனால் தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல், தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை உருவாகிறது.

எனவே, நடப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கும் தொழில் முனைவோர்களுக்கு, அவர்கள் பரிவர்த்தனை செய்யும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் அவர்களின் வங்கி பரிவர்த்தனைக்கு தகுந்தாற் போல், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், கடந்த 19.6.2020 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், வங்கித் துறையினர் மற்றும் கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், கோவிட் -19 காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், கடன் வழங்குவது குறித்த அரசின் அறிவிப்புகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்ற காரணத்தைக் கூறி நடைமுறையில் பல வங்கிகள் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. வங்கிகள் கடன் வழங்குவதில் தற்போது வரை தாமதம் செய்வதால் தொழில் முனைவோர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. இந்த அறிவிப்பை, வங்கிகள் கண்டிப்பாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.  

மேலும், தற்போதுவரை, தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை இயல்பாக நடத்த இயலாத நிலையில் இருப்பதால், தங்களது வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே, இந்த பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் தங்களது வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு டிசம்பர் 2020 வரை கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி, இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யாமல், அதை அசலுடன் சேர்த்து, நிலுவைத் தொகையை அதிகப்படுத்துவதால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். ஆகவே, கடனுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கோவையில் உள்ள தொழில்முனைவோர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்றி அவர்களுக்கு உதவிடுமாறும் மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...