கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை சிறைச்சாலையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 பிறந்ததினத்தை முன்னிட்டு கோவை சிறைச்சாலையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது அவர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கே அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைகொட்டகை, தற்போது நினைவு மண்டபமாக மாற்றப்பட்டு அவர் இழுத்த செக்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வ.உ.சியின் 149வது பிறந்த நாளான, இன்று அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவர் இழுத்த செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.