கோவையில் இருந்து வெளியூர்களுக்கு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை இயக்க திட்டம்; குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படாது

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 50 சதவீத அல்ட்ரா டீலக்ஸ் விரைவு பஸ்களை இயக்க திட்டம், என  போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 50 சதவீத அல்ட்ரா டீலக்ஸ் விரைவு பஸ்களை இயக்க திட்டம், எனபோக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், சென்னை, புதுச்சேரி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு பஸ்கள் வரும் திங்கட்கிழமை முதல் இயக்கப்படும் என்ற தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை தவிர்த்து மீதமுள்ள அல்ட்ரா டீலக்ஸ் அரசு பஸ்களில் 50 சதவீத பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

இது குறித்து விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில்:

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ்கள் இயக்கப்படாது. அல்ட்ரா டீலக்ஸ் வகை சாதாரண சொகுசு பஸ்களில் 50 சதவீதத்தை இயக்க உள்ளோம். முதல் கட்டமாக சென்னை, நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த விரைவு பஸ்களில் பயணிகள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல் பயணம் செய்ய வேண்டியது உள்ளது. நீண்ட நேரம் பயணம் செய்வதால் யாராவது ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் மற்ற நபர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எனவே, இரண்டு இருக்கைகளில் ஒன்றில் மட்டுமே பயணிகள் அமர அனுமதிக்கப்படுவார்கள். 

மற்றொரு இருக்கை காலியாகவே இருக்கும். இன்று முதல் முன்பதிவு தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது, என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...