கோவை மாநகர் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை மீறி லாரிகள் வந்தால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து காவல் துணை ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் மாநகர் சாலைகளில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் முத்தரசு எச்சரித்துள்ளார்.

கோவை: கோவையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் மாநகர் சாலைகளில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு எச்சரித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதிகளில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை வீதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை-திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சிறுவாணி சாலை என மாநகர் எல்லை பகுதிகளுக்குள் வரும் இச்சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், கட்டுப்படுத்தும் விதமாக காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் பயணிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறுகையில், ‘‘அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகர் சாலைகளில் பயணித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதால் அப்பணிகளுக்காக மட்டும் 15 லாரிகள் இந்நேரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...