கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக வார்டுகள் தோறும் காய்ச்சல், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக வார்டுகள் தோறும் காய்ச்சல், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளுக்காக கூடுதலாக நர்ஸ்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களை நியமிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, 25 நர்ஸ்கள், 23 லேப் டெக்னீசியன்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 37 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் வகையில் புதிதாக 25 நர்ஸ்கள், 23 லேப் டெக்னீசியன்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,’’ என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.