கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தையும் கடந்து பரவி வரும் நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பாக தினமும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகளை வெளியிடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ளுதல், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம், மருத்துவர்கள் பணியாளர்கள் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்தல், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருத்தல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு, போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோவை மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களிடமிருந்து பிறருக்கு தொற்று பரவாமல் அவர்களை விரைவாக தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட உதவி பொறியாளர் நிலையில் குழு அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட நபர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரும் நாட்களில், பரிசோதனைகளை, மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.