கோவை: முன்விரோத தகராறில் கோவையில் வாலிபர்களுக்கு நேற்று முன் தினம் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகன், வெங்கடேஷ் (18) தந்தைக்கு உதவியாக கடையை கவனித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வெங்கடேஷ் தனது நண்பர் லாரன்ஸ் என்பவருடன் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
பின்பு, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இரண்டு பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சுஜி மோகன், அஸ்வின், கௌதம், மில் சிவா, ராஜேஷ், விஜய் ஆகியோர் முன் விரோதம் காரணமாக இரண்டு பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த ரத்தினபுரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.