கல்லூரி அரியர் தேர்விற்கு பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டுமென இந்து இளைஞர் முன்னணி அரசுக்கு கோரிக்கை!

நீலகிரி: கல்லூரி அரியர் தேர்விற்கு பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: கல்லூரி அரியர் தேர்விற்கு பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே வேளையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காது விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை எளிய தவணை முறைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத மூன்றாமாண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வர வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...