பல்லடம் அருகே மாற்று பாதை வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருப்பூர்: பல்லடம் அருகே கிராமத்தின் மற்றொரு பகுதியில் மாற்று பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே கிராமத்தின் மற்றொரு பகுதியில் மாற்று பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு செல்வதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, தற்போது உயர் மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது.



இந்நிலையில், மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இன்று பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் தலைமையில், பவர்கிரி நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.



இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விவசாய விளை நிலத்தில் எதற்காக அளவிட்டு பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...