இந்தியாவே கொண்டாடும் செப்டம்பர் மாத பட்டாம் பூச்சி பெருவிழா வரும் 5ம் தேதி தொடங்குகிறது..!

கோவை: இயற்கையை அதன் தன்மையை மாறாமல் பாதுகாப்பது சின்னஞ்சிறு பட்டாம் பூச்சிகளும், அதனை சுற்றி வாழும் உயிரினங்கள் தான்.

கோவை: இயற்கையை அதன் தன்மையை மாறாமல் பாதுகாப்பது சின்னஞ்சிறு பட்டாம் பூச்சிகளும், அதனை சுற்றி வாழும் உயிரினங்கள் தான். அவற்றை தெரிந்து கொள்ள இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட இயற்கை சார்ந்த தன்னார்வ அமைப்புகள் செப்டம்பர் 5ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை பட்டாம் பூச்சி பெருவிழாவை (big butterfly month india 2020) கொண்டாடுகின்றனர்.

வனவிலங்கு ஆர்வலர்கள் வன உயிரிகளைப் பற்றி விழிப்புணர்வு, தகவல்கள், உண்மை தன்மை, அழிவின் நிலையில் உள்ள விலங்குகள், பாதுகாக்கும் முறைகள் என வகைப்படுத்தி வன விலங்கு வாரம் என்று கொண்டாடுவது போல பட்டாம் பூச்சிகளுக்கு என தனியாக ஒரு பெருவிழாவை 30க்கும் மேற்பட்ட இயற்கை சார்ந்த தன்னார்வ அமைப்புகள் முன்னெடுத்து நடத்துகின்றன. இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்வானது செப்டம்பர் 14ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நடக்கிறது. இதில் பட்டாம் பூச்சி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கிராஃபர்கள், மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அதேபோல, இந்த நிகழ்வின் போது, புகைப்பட போட்டி, வீடியோகிராபி போட்டி, வினாடி வினா, ஒரிகமி, கிறாஸ்வேர்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

இந்த பெருவிழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த கோவை இயற்கை மற்றும் பட்டாம் பூச்சியின் அமைப்பும் ஒரு பகுதியாக இணைகிறது.

இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது, சுற்றுப்புறத்தில் உள்ள பட்டாம் பூச்சிகள் கணக்கீடு செய்தல், நிபுணர்களுடன் இணைய வழி உரையாடல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளில் webinar நிகழ்வுகள், தமிழ் கவிதை போட்டிகள், ஓவியம் போன்ற போட்டிகளை நடந்த உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த பெருவிழா தமிழகம் முழுவதும் நடப்பதால் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மேலும், பட்டாம் பூச்சிகளை கணக்கீடு செய்யும் முன் காலம், நேரம், வருகை நேரம், பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை, புகைப்படம் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு butterflies of india, inaturalist, india biodiversity portal போன்ற வலைதளங்களில் பதிவிட வேண்டும். இதன் மூலம் அதன் வாழ்வியலை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நடக்கும் போட்டிக்கான விவரங்கள் அனைத்தும் TNBS முகநூல் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்படுகிறது. போட்டியாளர்கள் அங்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...