கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் மாநகர் கிழக்கு மாவட்ட அவசர நிர்வாகக்குழு கூட்டம்!

கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட அவசர நிர்வாகக்குழு கூட்டம், கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட அவசர நிர்வாகக்குழு கூட்டம், கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, பேசிய அவர், மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழகம் முழுவதும் இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலத்தில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக அரும் பாடுபட்டு, அயராது பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள், காவல்துறையினர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோர்களை இழந்து வாடும் இவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், கோவை மாவட்ட திமுக சார்பில் ஏற்கனவே கடந்த 29.05.2020 மற்றும் 06.07.2020 ஆகிய தேதிகளில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து பல ஆலோசனைகளையும் கோவை மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத் தன்மை கொண்ட கொரோனா ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதற்கு இதுவரை எந்த பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல, கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை என்று கூறிய அவர், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் ஆன்லைன்‌ மூலம்‌ பரிசோதனை முடிவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால் மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.



இக்கூட்டத்தில் கழக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, டாக்டர்.கோகுல், இரா.க.குமரேசன், மு.கா.உமாமகேஸ்வரி, மு.இரா.செல்வராஜ், மா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், பி.மாரிச்செல்வன் ex.mc. ஆ.கண்ணன், நா.கமல் மனோகரன், பா.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் மா.மகுடபதி , சி.டி.டி ராஜராஜேஸ்வரி, பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் எஸ்.எம்.சாமி, ஆர்.எம்.சேதுராமன், மார்க்கெட் எம். மனோகரன், ப.பசுபதி, மு .சிவா, ஷேக் அப்துல்லா, வே.பாலசுப்ரமணியம், மா.நாகராஜ், இரா.சேரலாதன் , வி.ஐ.பத்ருதீன், மகளிர் தொண்டரணி மீனா ஜெயக்குமார், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...