கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சரவணம்பட்டி சித்ரா நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் துரைசாமி (70). இவர் இன்று காலை தனது நெருங்கிய உறவினர் இல்ல திருமணத்திற்கு கீரணத்தம் பகுதிக்குசென்றுள்ளார். இந்நிலையில், இன்று 11 மணியளவில் வீடு திரும்பி அவர் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டு இருந்த 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுண் நகை திருடபட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து, துரைசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபியில் உள்ள அவரது தோட்டம் விற்ற வகையில் கிடைக்க பெற்ற பணம் 30 லட்ச ரூபாய் மற்றும் 10 பவுன் நகையை பீரோவில் வைத்துவிட்டு, அவர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும், போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகையை சேகரித்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் முன்னாள் குற்றவாளிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.