மைதானங்கள் திறந்தாச்சு..!பொள்ளாச்சியில் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகம்

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உட்பட, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டு ஆர்வலர்கள்  உற்சாகமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி: ஐந்து மாத இடைவெளிக்குப் பின், விளையாட்டு மைதானங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது, தங்களுக்கு மிகுந்த மன உற்சாகத்தையும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக உள்ளது, என இளைஞர்கள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளு போது மக்கள் தெரிவித்துள்ளனர். 



தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக சராசரி வாழ்க்கை முடங்கி கிடந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் முதல் பொது முடக்கத்தில் அரசு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு, உரிய கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. 

இதில், குழந்தைகள் மற்றும் இளைஞர்ககளுக்கு உற்சாகம் தரும் விதமாக, விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு, உரிய கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. 



இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உட்பட, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டு ஆர்வலர்கள்உற்சாகமடைந்துள்ளனர். 

காலை நேரங்களில்,பொதுமக்கள் நடைபயிற்சியிலும், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதானங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முறையாக நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...