நான்கு மாதங்களுக்காவது கடன் தொகை தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் - கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!

கோவை: 4 மாதங்களுக்காவது கடன் தொகை தவணை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை:

நான்கு மாதங்களுக்காவது கடன் தொகை தவணை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் தீவிரத்தால் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. மோசமான இச்சூழல் காரணமாக உற்பத்தி மற்றும் பணப்புழக்கத்தில் யாரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வங்கிகளில் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிய பல்வேறு கடன்களுக்கான வட்டிகளையும், அசலையும் கட்ட கால தவனை அளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் கடந்தும் கூட தொழிற்சாலைகளின் இயக்கம், உற்பத்தி மற்றும் விற்பனை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

மேலும், பணப்புழக்கமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தற்போதும் தொடரும் நிலையில் குறைந்தபட்ச உதவியாக வரும் டிசம்பர் மாதம் வரையாவது தொழிற்சாலைகள் அபிவிருத்திக்காக வாங்கப்பட்ட மூலதனக்கடன்கள் மற்றும் இயந்திரக்கடன், வாகனக்கடன், வீடு அடமானக் கடன் போன்ற கடன்களை கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் சிறு, குறு மோட்டார் பம்ப்செட் உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள், ஜாப் ஒர்க் செய்வோர் என இத்தொழிலை நம்பி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக கொரோனா முழு அடைப்பு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி தினசரி உணவிற்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மேலும், 75 சதவீத தொழிற்சாலைகள் குறைந்தளவு தொழிலாளர்களை வைத்து தான் இயங்கி வருகின்றன. அதேபோல, பல தொழிற்கூடங்களில் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை நோ ஒர்க் விடுமுறை விடப்படுகிறது.

எனவே, குறைந்தது 4 மாதங்களுக்காவது வங்கி கடன்கள், வட்டிகள் உட்பட அனைத்தையும் ஒத்திவைப்பதன் மூலம் அனைவரது வாழ்க்கையிலும் குறைந்தபட்ச நிம்மதியையாவது ஏற்படுத்த முடியும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...