கோவையில் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார் உட்பட மூன்று பேர் கைது!

கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை ராமநாதபுரம் ஆறுமுக நகர் பகுதியை சேர்ந்த காஷ்மீர் லாரன்ஸ் (50) என்பவர் தனது மனைவியுடன் நின்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து வந்த நபர் அவரது மனைவியிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காஷ்மீர் லாரன்ஸ் மனைவி கூச்சலிடவே, அருகில் இருந்த பொதுமக்கள் செல்போனை திருடி தப்பியோடிய நபர்களை பிடிக்க முயன்ற போது வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பினார். மற்றொருவர் மாட்டி கொள்ள அந்த நபரை பொதுமக்கள் பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த நபருக்கு 17 வயது உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எனவும் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு 16 வயது வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரனையில் இவர்களது கூட்டாளியான சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(20) என்பவருக்கு திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர் சிறார்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் நாகராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...