கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் உள்ள கோவிட்-19 கேர் மையங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கோவை அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை மற்றும் கொடீசியா ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் குறைவான தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கோவை கொடீசியாவில் உள்ள கோவிட்-19 கேர் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கிழக்கு மண்டலம் காளப்பட்டி சாலையில் தனியார் கலையரங்கத்தில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 316 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 கேர் மையத்தைப் பார்வையிட்டு, இம்மையத்தில் சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் மருத்துவர்கள் சுகாதார அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன், நகர்நல அலுவலர் எஸ்.ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.