கோவை: தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளும், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துவங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு கிளைகளிலும் இளைஞர், இளம் பெண்கள் பாசறையை உருவாக்கி அவர்கள் மூலம் அதிமுக அரசு செய்த திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று, வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு வரும் எந்த நோயாக இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கால்நடைத் துறை சார்பில் இருக்கும் கால்நடை ஆம்புலன்ஸில் மருந்துகள் தயார் நிலையில் உள்ளது என்றும், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் மருந்துகளும் தயார் நிலையில் வைத்திருக்க அந்தந்த கால்நடை மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் இந்த ஆண்டு 200 கோடி மதிப்பில் ஒன்றரை லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடும், 500 கோடி மதிப்பில் பன்னிரெண்டாயிரம் மகளிர்களுக்கு கறவை பசுவும், 2 லட்சம் மகளிருக்கு 35 கோடி ரூபாய் மதிப்பில் நாட்டுக்கோழியும் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு போலவே பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு விலையில்லா நாட்டுக்கோழி இந்த ஆண்டும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.