உலக ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #HBDSadhguru - பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகள் நட்டு கோலாகல கொண்டாட்டம்!

கோவை: பருவமழை முன்கூட்டியே பெய்ததால் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வும் முன்கூட்டியே நடந்து இருப்பதாக பட்டாம் பூச்சி ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 63-வது பிறந்தநாளான இன்று சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, நதிகள் மீட்பு இயக்கம் தொடங்கப்பட்ட செப்.3-ம் தேதியை நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக கருதி ஈஷா தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு சத்குருவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில், நடிகைகள் கங்கனா ரனாவத், காஜல் அகர்வால், தமன்னா, சுஹாசினி மணிரத்னம், நடிகர் சந்தானம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சத்குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

மேலும், லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் சத்குரு அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவ பதிவுகளாக பதிவிட்டு தங்களின் வாழ்த்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக,தற்போது ட்விட்டரில் #HBDSadhguru என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 6-வது இடத்திலும் உள்ளது. இதேபோல், #RiverRevitalization மற்றும் #CauveryCalling ஆகிய ஹாஸ்டேக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

கடந்தாண்டு செப்.3-ம் தேதி தான் காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு 'Rally for Rivers' என்ற ‘நதிகள் மீட்பு’ விழிப்புணர்வு பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாய நிலங்களில் 83 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...