கோவை கோட்டத்தில் 542 பேருந்துகள் இயக்கம்..! முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - நடத்துனர்கள்

கோவை: கோவை கோட்டத்தில் 542 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பேருந்துகளில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என நடத்துனர்கள், ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை கோட்டத்தில் 542 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பேருந்துகளில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என நடத்துனர்கள், ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலான மக்கள் அச்சம் காரணமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யவே அதிக அளவில் விரும்புகின்றனர்.

இந்நிலையில், கோவை கோட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் 2ம் தேதி 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு 598 பேருந்துகள் இயக்கப்பட்டன.



இந்த நிலையில், இன்று மீண்டும் 56 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு 542 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறிய அரசு பேருந்து நடத்துனர்கள், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மக்கள் பேருந்து பயணங்களை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.



மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கூட ஒருவித பதற்றமாகவும், அருகில் யாரவது அமர்ந்து விடுவார்களா? என அச்சத்துடன் காணப்படுகின்றனர் எனவும் பேருந்துகளில் கிருமி நாசினி வைக்கப்பட்டு, முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறிய அவர்கள், பேருந்துகளும் தினமும் சுத்தம் செய்யப்படுவதாகவும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினர்.

இதுகுறித்து அரசு பேருந்தில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜ்குமார் கூறுகையில், "ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின் முதல் முதலாக இயக்கப்பட்ட பேருந்துகளில் ஓரளவு கூட்டம் இருந்தது. அதன்பின் தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவே மக்கள் பயணம் செய்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அச்சம் காரணமாகவே மக்கள் வர தயங்குகின்றனர். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்,’’ என்றார்.

கோவை கோட்டத்தில் கோவையில் 221 பேருந்துகள், திருப்பூரில் 115, நீலகிரியில் 86, ஈரோட்டில் 120 பேருந்துகள் என மொத்தம் 542 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...