கோவை ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ள பாலசுந்தரம் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது - போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர், முத்தரசு தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர், முத்தரசு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எப்.சி, ஒட்டுநர் உரிமம் பெறுதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை சாலைகளின் ஒரங்களிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இருசக்கர வாகனம், கார்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நேரிசல் உண்டாகுகிறது.

இது குறித்து, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில்:

கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தம் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என அறிவுறுத்தியுள்ளோம். அதே போல், அச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...