சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு: கேரளா அதிகாரிகள் ரகசியமாக தண்ணீர் திறக்கிறார்களா? என தமிழக அதிகாரிகள் கண்காணிப்பு

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.06 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.06 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.

கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருந்தபோதும், சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயராமல், சற்று மெதுவாகவே உயர்ந்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கேரளா அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் ரகசியமாக தண்ணீர் திறந்துவிடுகிறார்களா? என்கிற சந்தேகமும் எழுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கோவை மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்களுக்காக 95 எம்.எல்.டி நீர் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படுகிறது, என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...