கோவை: கொரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால், பொள்ளாச்சியில் நோய்த்தொற்று அதிகரிப்பதாக நகர திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 7 நாட்கள் வரை தாமதம் ஆவதால், பாதிக்கப்பட்ட நபர் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால் ஏராளமான பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக, திமுக நகர கழக பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் திமுகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய திமுக நகர கழக பொறுப்பாளர் மருத்துவர். வரதராஜன், நோய்த்தொற்றை குறைக்க வேண்டுமென்றால் பரிசோதனை முடிவுகள் ஒரே நாளில் கிடைக்கும்படி அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரே நாளில் முடிவுகள் வந்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுபடுத்த முடியும் என தெரிவித்தார்.