கோவையில் நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

கோவை: கோவையில் நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கோவை: கோவையில் நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள், பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்து இடத்தையும் அபகரித்து விட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து கண்ணம்மாள் அளித்துள்ள மனுவில், கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் எதிர்புறம் வசித்து வந்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மளிகை கடை நடத்த போக்கியத்திற்கு இடம் வேண்டுமென்று தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறியதாக தெரிவித்து இருந்த அவர், தனது மகன் மற்றும் மகளிடம் கேட்டுச் சொல்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் 50,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கி உள்ளதாகவும் உடனடியாக அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்திய ஆறுமுகம் மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தன்னை ஏமாற்றி கை நாட்டு பெற்றதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், ரூ.50 ஆயிரம் தன்னிடம் கொடுத்த ஆறுமுகம் இரண்டு செண்ட் வீட்டையும் ஒரு வார காலத்திற்குள் எழுதி தரும்படி கட்டாயப்படுத்திய போது, போக்கியத்திற்கு தானே இடம் கொடுத்தேன் என்று கேட்டபோது, நான் விற்று விட்டதாக என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று உள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல, ஆறுமுகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை தரை மட்டம் செய்ததாக குற்றம் சாட்டி இருந்த கண்ணம்மா, இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அரசியல் பிரமுகர் என்ற காரணத்தால் காவலர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் அவரது மகனிடம் கேட்டபோது, அவர்கள் தனது மகள் ராணியை தாக்கியதுடன் சாதி ரீதியாக திட்டி பேசியதாகவும், தனது அறியாமையை பயன்படுத்தி வீட்டை இடித்து நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...