பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக மாற்றவேண்டி நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் நீண்டகால கோரிக்கையான, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் இது குறித்து பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்தியநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், மயிலாடுதுறை, தென்காசி போன்ற சிறிய பகுதிகள் எல்லாம் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பொள்ளாச்சி மட்டும் அரசியல் காரணங்களுக்காக மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது.

இன்னும் 10 நாட்களுக்குள் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வராவிட்டால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை திரட்டி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...