கோவையில் அரசினர் பொறியியல் கல்லூரி முன்பு காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவை: கோவையில் அரசினர் பொறியியல் கல்லூரி முன்பு காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் அரசினர் பொறியியல் கல்லூரி முன்பு காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அண்ணா மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த கடைகள் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த காய்கறி சந்தை திறந்த வெளியில் செயல்பட்டு வந்தது.



இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்பட்டது. சில இடங்களில் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளதால் ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.



இந்த நிலையில், இதனை சரி செய்யக் கோரி அதிகாரிகளிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்து இருந்த நிலையில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று திடீரென அரசினர் பொறியியல் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி காவல்துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

வியாபாரிகளின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...