கோவையில் வாடகை பாக்கி தரவில்லை என கூறி கடையை சேதப்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

கோவை: கோவையில் வாடகை பாக்கி தரவில்லை என காரணம் கூறி கடையை சேதப்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை: கோவையில் வாடகை பாக்கி தரவில்லை என காரணம் கூறி கடையை சேதப்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாடகைக்கு கடையை எடுத்து பேக்கரி நடத்தி வருகிறார். கடைக்கு மாத வாடகையாக 25 ஆயிரம் ரூபாயை கொடுத்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 4 மாதங்களாக பேக்கரியை திறக்காத நிலையில், வாடகையை உடனடியாக செலுத்தும்படி கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரராஜ் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

ஊரடங்கு காலத்திலும் நாகராஜ் கடன் வாங்கி 38 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். இருப்பினும் மீதி தொகையை கேட்டு கடந்த 20ம் தேதி சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி மற்றும் அவரது மகன் விக்னேஷ்பிரபு ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.



இந்நிலையில், இரண்டு மாதம் தனக்கு கால அவகாசம் வேண்டும் என நாகராஜ் கேட்ட நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர் அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த மாதம் 20ம் தேதியன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதியன்று இரவு சுமார் 8:30 மணியளவில் நாகராஜ் அவரது மனைவி மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர் ஹரிஹரன் ஆகியோர் கடையினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு வந்த கட்டிட உரிமையாளர் சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி மற்றும் அவரது மகன், மேலும் இருவர் கடைக்குள் நுழைந்து கடப்பாரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு நாகராஜை தாக்கியதுடன் கடையையும் சேதப்படுத்தியுள்ளனர்.



மேலும், கடையில் வைத்திருந்த 7,342 ரூபாய் மற்றும் பூர்த்தி செய்யப்படாத காசோலைகளையும் எடுத்து சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, விக்னேஷ்பிரபு எடுத்து வைத்துக் கொண்ட பணம் மற்றும் காசோலைகளை திரும்ப பெற்று தருமாறு காவல்துறையினரிடம் நாகராஜ் கேட்டுள்ளார். அதற்கு செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்காக காவல்நிலையம் வரும்போது பெற்று கொள்ளுமாறு காவல்துறையினர் கூறியதாகவும் செவ்வாய் கிழமை சென்றபோது மற்றொரு நாள் வரும்படி கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாகராஜ் மற்றும் அவரது மனைவி கோவை மாநகர காவல் ஆணையரிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும், சேதப்படுத்திய பொருள்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2.85 லட்சம் சண்முகசுந்தரராஜ் அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறும், எடுத்து சென்ற பணம் மற்றும் பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆகியவற்றை திரும்ப பெற்று தருமாறு சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...