கோவை: கோவை மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் பேருந்துகளில் காலை நேரங்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை:
கோவை மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் பேருந்துகளில் காலை நேரங்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூருக்கும் அங்கிருந்து கோவைக்கும் ஏராளமானோர் பணி நிமித்தமாக ரயில் மற்றும் பேருந்து வசதிகளை பயன்படுத்தி வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஊரடங்கு தளர்வுகள் நிறைவுற்ற நிலையில் வரும் 7ம் தேதி முதல் பொது போக்குவரத்து துவங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நகர பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கோவையில் இருந்து திருப்பூருக்கும் அங்கிருந்து கோவைக்கும் வருபவர்கள் காரணம்பேட்டையில் இறங்கி அங்கிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் ஏறி பயணம் செய்கின்றனர்.

அதேபோல, திருப்பூரில் இருந்து கோவை வருபவர்களும் காரணம்பேட்டையில் இறங்கி கோவை வருகின்றனர். குறைவான பேருந்ததுகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படாமல் மக்கள் நெருக்கமாக அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், காலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி மாறி செல்வது சிரமமாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்பதையும், பயணிகளுக்கு சானிடைசர் வழங்கி கையை சுத்தப்படுத்திய பின்னருமே பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்கின்றனர். கோவை நகருக்குள் பெரும்பாலான வழித்தடங்களில் குறைவான பயணிகளே பேருந்துகளில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் வராததால் தற்போது 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் 260 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மேலும் 21 பேருந்துகளை நிறுத்தம் செய்ய போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒரு சில வழித்தடங்களில் மட்டும் காலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் கோவையில் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.