கோவை: கோவை சுந்தராபுரம் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மணி(74), சரோஜினி (72). மணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி சரோஜினி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, திருமணமான இவரது மகள் உடனிருந்து கவனித்து வந்து உள்ளார்.
இந்நிலையில், சரோஜினுக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அருகில் வசிக்கும் செவிலியரை அழைத்து சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனை கேட்டு சரோஜினியின் கணவர் மணி மயக்கமடைந்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் வேறு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைத்தனர். மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, இருவரது உடலையும் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.