கோவை மதுக்கரை அருகே நாயை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை: கோவை மதுக்கரை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டினுள் நாயை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: கோவை மதுக்கரை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டினுள் நாயை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மதுக்கரை அருகே நாய்களை கொன்று சாப்பிட்ட, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை மதுக்கரை பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் அடிக்கடி சிறுத்தைகள் உலா வருவது வழக்கமாக உள்ளது. சிறிது நாட்களுக்கு முன்னர் மதுக்கரை விநாயகர் கோவில் வீதி அருகே பட்டியில் கட்டப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிகளை வனத்தில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணிக்க தொடங்கினர். ஆனால், நீண்ட நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்படாத நிலையில் இருந்தது.



இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அங்கு சிறுத்தையானது ஒரு நாயை அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க சிறுத்தையை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே கூண்டினுள் நாயை அடைத்து வைத்து வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...