கோவை: கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம், முள்ளங்காடு வனப்பகுதியில் மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி பிரதான குழாய் சேதமடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து, வனத்துறையினர் அளித்த தகவலையடுத்து சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.