கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடியுடன் கூடிய கனமழை..! பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல, இன்று பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக, மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. மாநகரில் இடையர்பாளையம், கோவில்மேடு, சாய்பாபா காலனி, உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வட கோவை, காந்திபுரம், சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதேபோல கோவை புதூர், மதுக்கரை, திருமலையம்பாளையம், எட்டிமடை, நவக்கரை, போத்தனூர், சூலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...