கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (27). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆனைமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆனைமலை போலீசார், ஆனைமலை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சோமந்துரை சித்தூரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரை, பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், மூன்று இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தி உடுமலை சிறையில் அடைத்தனர்.