பொள்ளாச்சியில் நாம் இயக்கம் சார்பில் உலக தென்னை தின கருத்தரங்கம்: மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூ 130 வழங்க வேண்டும், என கோரிக்கை

கோவை: பொள்ளாச்சியில் 'நாம் இயக்கம்' சார்பில் நடைபெற்ற உலக தென்னை தின கருத்தரங்கில், மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூ 130 வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கோவை: பொள்ளாச்சியில் 'நாம் இயக்கம்' சார்பில் நடைபெற்ற உலக தென்னை தின கருத்தரங்கில், மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூ 130 வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

உலக தென்னை தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் நாம் இயக்க அலுவலக கட்டிட திறப்பு விழா, மற்றும் தென்னை விவசாயிகள் கலந்துகொண்ட கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் இயக்க மாநிலத் தலைவர், பிரபு ராஜா தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தென்னை விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையான கொப்பறை தேங்காய் கிலோவிற்கு ரூ.130 மத்திய அரசு வழங்கி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அதே போல் தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி, கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும், காங்கேயத்தில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் நடைபெற்று வருகிறது எனவும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், எனவே கலப்படத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால் தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் நாம் இயக்க தலைவர் பிரபு ராஜா தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...