கோவை வெள்ளலூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை!

கோவை: கோவை வெள்ளலூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை வெள்ளலூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார்-சாந்தி தம்பதியினரின் மகன் சரத்குமார் (28). இவர் சென்னையில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில வருடங்களாக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இவருக்கு பொருத்தமான பெண் அமையாததின் காரணமாக சரத்குமார் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் கதவை திறந்து பார்க்கையில் சரத்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இது குறித்து அவரது தாய் சாந்தி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...