மக்களிடையே வரவேற்பு குறைவு எதிரொலி: கோவை கோட்டத்தில் 202 பேருந்துகள் ரத்து; 598 மட்டுமே இயக்க முடிவு

கோவை: கோவை கோட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு, இன்று 598 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவை: கோவை கோட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு, இன்று 598 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.

கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மண்டலங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின், மீண்டும் ஜூலை மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொதுபோக்குவரத்து துவங்கியது.

கோவை கோட்டத்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி 800 பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான, பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். இதன் காரணமாக, இன்று 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு 598 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:

‘கோவை கோட்டத்தில் --கோவையில் 257, திருப்பூரில் 111, நீலகிரியில் 104, ஈரோட்டில் 126 பேருந்துகள் என மொத்தம் 598 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...