வால்பாறையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் வட்டாட்சியர் ஆலோசனை!

கோவை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரம் ரொட்டிக் கடை, சோலையார் அணை உட்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன.

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகளின் படி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர இ பாஸ் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



இந்த நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்திருத்தல், முக கவசம் அணிதல், இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...