கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதி, என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள், தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட மானவாரி சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் விளைவிக்கும் மானாவாரி பயிர்கள், காய்கறிகளை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தையில் கொண்டுவந்து, ஏலமிட்டு விற்பனை செய்கின்றனர்.
இங்கிருந்து, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சந்தைக்கு, காய்கறிகள், வாங்குவதற்கும் விற்பதற்கும் வரும் வியாபாரிகள், மற்றும் விவசாயிகள், அவர்கள் கொண்டு வரும் காய்கறிகளை, சரக்கு வாகனங்கள் கொண்டுவருவது வழக்கம்.
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கு வரும் வியாபாரிகளுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு, கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளித்து, வாகனத்தில் வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதித்து, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.