தமிழகத்தில் முதன்முதலாக, கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு

கோவை: தமிழகத்தில் முதன்முதலாக, கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் இன்று துவக்கப்பட்டது.

கோவை: தமிழகத்தில் முதன்முதலாக, கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் இன்று துவக்கப்பட்டது.



கோவை வடகோவை சிந்தாமணி பகுதி அருகே திருநங்கைககள் 10 பேர் இணைந்து "கோவை டிரான்ஸ் கிச்சன்" என்ற உணவகத்தை இன்று துவங்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.



தற்போது பத்து திருநங்கைககள் இணைந்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளதாகவும், வரும் நாட்களில்,வ்மக்களிடையே பெறும் வரவேற்பை பொறுத்து ஆறு மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரம்பிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய, கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா:

தமிழகத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம், கோவையில் இன்று ஆரம்பித்து உள்ளோம். இந்த முயற்சி, திருநங்ககளின் வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் உதவியாக இருக்கும். வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும்.

இந்த உணவகம் திறப்பதற்கு யுனைடட் வே சென்னை, ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ மற்றும் அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அப்பாசாமி கல்லூரியில் ஆறு மாதம் சமையல் மற்றும் உணவக மேலாண்மை குறித்து பயிற்சி எடுத்து கொண்டதாகவும், தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...