கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, அனைத்து மாணவர்களும், அரியர் வைத்துள்ள மாணவர்கள் உட்பட அனைவரும் பாஸ் என்ற தமிழக முதல்வரின் உத்தரவை மாணவர்கள் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக, கோவையில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.
கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை, காந்திபுரம், ரெயில் நிலையம் என மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வி.எல்.பி கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், நன்றிகளை நிலையான வாக்குகள் அள்ளி தருவோம், என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று, வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே, மாணவர்களின் கல்விக் கடவுள் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.