பொள்ளாச்சியில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய வாகனங்கள் தயார் - சார் ஆட்சியர்

கோவை: பொள்ளாச்சியில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படும், என பொள்ளாச்சி சார் ஆட்சியர் தகவல்.



கோவை: பொள்ளாச்சியில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படும், என பொள்ளாச்சி சார் ஆட்சியர் தகவல்.

பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலை அடுத்து, மருத்துவ குழு செல்வதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வீடு வீடாக சென்று நோய் பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இது குறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் கூறுகையில்: பொள்ளாச்சியில் நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பணியாளர்களுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கொரோனா அறிகுறிகள், ஏதேனும் இருந்தால் சார் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04259 - 224855, உடனே தகவல் தெரிவிக்க வேண்டும், என தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...