கோவை: பொள்ளாச்சியில், நகைக்கடை உரிமையாளர், காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சியில், நகைக்கடை உரிமையாளர், காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் இன்று மகாலட்சுமி நகர், 70 வயது முதியவர், மரப்பட்டை வீதி, 38 வயது பெண், சின்னாம்பாளையம் வெங்கடாசலம்பிள்ளை காலனி, 59 வயது ஆண், 48 வயது பெண், 71 வயது முதியவர் மற்றும் அய்யம்பாளையம் புதூர் 44 வயது ஆண். ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்த 56 வயது பெண் தென்சங்கம்பாளையம் 75 வயது முதியவர் என இன்று பொள்ளாச்சி வடக்கு தெற்கு நகரம் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் எட்டு பேருக்கு நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நேற்று பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் பொள்ளாச்சி கடை வீதி 64 வயதான நகைக்கடை உரிமையாளர் மற்றும் சின்னாம்பாளையம் கேசவபுரம் 37 வயதான ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
மேலும், மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் பணியாற்றி வரும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் அவரது மகனுக்கும் நோய்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோய் தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது.