கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இன்று முதல் 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு 5 பேருந்துகளும் வால்பாறையை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களுக்கு 6 பேருந்துகள் என 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளை வழித்தடத்தில் அனுப்புவதற்கு முன் நகராட்சி கொரோனா தடுப்புப் பிரிவினர் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினார்.
மேலும், தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களுக்கு சென்று திரும்பி வரும் பேருந்துகளும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
இதேபோல, கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்கள் தொழிலாளர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.