கோவை: சூலூர் அருகே முதியவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
சூலூர் அருகே முதியவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகே உள்ள நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் கணபதிகவுண்டர் மகன் காளியப்பன்(60). இவர் பிரபல பவுண்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு சொந்தமான வீடு நீலாம்பூர் பகுதியில் உள்ளது. 5க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மாடியில் குடியிருந்து வரும் இவர், சற்று முன்கோபக்காரர் என்பதால் அதிகமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துபவர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட இவர், நேற்று காலை 6 மணியளவில் நீலாம்பூரில் இருந்து சின்னியம்பாளையம் வரை வாக்கிங் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வாக்கிங் சென்றுவிட்டு வரும் போது நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அருகே நடந்து வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில் மறைந்து நின்றிருந்த ஒருவர், தான் தயாராக வைத்து இருந்த கிரிக்கெட் மட்டையால் காளியப்பனை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நீலாம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து சூலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கொலை முயற்சியாக வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று இரவு 7 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து கொலை முயற்சி என பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்த சூலூர் போலீசார் அருகில் இருந்த நிறுவனங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.